எனை கவனிக்காமல் கடந்துபோகிறாய் நீ
எனை கலைத்துப் போட்டு
கடந்து போகிறது
உன் கொலுசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன் காலில்
இருந்ததற்கே இசை மீட்டக்
கற்றுக்கொண்டது
உயிரற்ற கொலுசு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கொலுசை கொள்ளை
அடிப்பவரைப் பார்த்திருக்கிறேன்
கொலுசால் கொள்ளை அடிப்பவளை
இங்குதான் பார்க்கிறேன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுநாள்வரை கொலுசின்
ஒலி பிடிக்கும்
இந்த நாள் முதல்
உன் கொலுசின் ஒலி
மட்டுமே பிடிக்கும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
உன்னை நான் கடக்கையிலும்
என்னை நீ கடக்கையில்
நமக்கு மட்டும் புரியும்
ஒரு மொழியில் பேசுகிறது
உன் கொலுசு
என் இருப்பை […]
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment