Tuesday, July 7, 2009

வருத்தப்படாத வாலிபர்கள் சாப்ட்வேர் கம்பெனி..

"தல தல நம்ம பூச்சி பாண்டிய கிளயன்ட் (client) புடிச்சு திட்டிட்டு இருக்காறு தல... சீக்கிரம் வெளிய வா தல"...

"இந்த கிள்யன்ட்க்கு நம்ள திட்டுரதே வேலையா போச்சு. இன்ணைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டிற வேண்டியது தான் .. எடுரா வண்டியே.. "

அங்கு கிளயன்ட் எக்கசக்க கோவத்துடன் இருக்க எக்குத்தப்பாக மாட்டி கொள்கிறார் கைபுள்ளை.. முகம் வேர்த்து விருவிருக்க கிளயன்ட் ரூமை விட்டு வெளியே வெளியே வருகிறார்

"என்ன தல.. இந்த ட்ரிப் திட்டு கொஞ்சம் ஓவரோ.."

"பேசாதே.. அசிங்க படுதிடிங்களே டா ... "

"தல உனக்கு சப்போர்ட் பண்றதுக்கு ஆள் கூட்டிட்டு வர போனோம்.."

"ஆள் எங்க?"

"நாம ப்ராஜெக்ட் ல ஒரு பய இல்ல.. எல்லாரும் டீம் ஔட்டிங் போய்டாய்ங்க.. நீ ஊம்னு சொல்லிறுந்தனா வெளி ப்ரொஜெக்ட்ல இருந்து ஆள் கூட்டிட்டு வந்துருபோம்.. "

"அது எனக்கு அவமானம்.."

"அத தான் நாங்களும் செஞ்சோம் .. என்ன தல இப்படி வேர்த்துருக்கு.. "

"டே கிளயன்ட் கேக்குறே ஒன்னு ரெண்டு கேள்விக்கு பதில் சொல்ல தெரியலனா இப்படி தான் வேர்க்கும்.. அதெல்லாம் கண்டுக்க கூடாது.. "

"அடடே மீட்டிங் போய்ட்டு வந்த கைபுள்ளைகே இப்டி வேர்க்குதுனா மீட்டிங்
எவ்ளோ பெருசா இருக்கும் யோசிச்சு பாரு. "

"ஏன்டா இன்னுமா இந்த கம்பெனி நம்ள நம்பிட்டு இருக்கு..."

"அது அவங்க விதி.. "

அங்கே காரில் ஷக்தி (பிரசாந்த்) வர..

"யாரு.. காரு.."

"டே அந்த கிளயன்ட் நம்ள அங்க திட்டுனது மட்டும் இல்லாம இங்க திட்டுறதுக்கும் ஆள் அனுப்பி வைசுருக்கான் டா.. ஒடுங்க டா.."

"ஹலோ ஹலோ.. எக்ஸ்கியூஸ் மீ.. "

"நீ ஒன்னும் சொல்ல வேணாம்.. டே சீக்கிரம் போங்க டா.."

"ஆஹா மடகிடான் யா மடகிடான் யா.."

"போதும் எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்.."

"லூசு.. நான் கம்பெனிக்கு புதுசு.."

"இங்க பாருடா புதுசாம்ல.. நல்லா கிளபுராய்ங்க டா பீதிய.. சரி யாரு மேனேஜர்..."

"வேலாயுதம் சார தான் பாக்கணும் ..."

"அந்த ப்ரொஜெக்ட்ல நீ என்னவா ஜாயின் பண்ண போரே..."

"டெஸ்டரா ஜாயின் பண்ண போறேன்.. "

"நானும் தான் டெஸ்டர்.. இதுல யாரு சீனியர் டெஸ்டர் .. "

"அத அங்க போய் முடிவு பன்னுவோம்.. "

அங்கு சென்றதும் மேனேஜர் வேலாயுதமும் சக்தியும் ஒன்னு கூடி விட..

"ஆகா ஒன்னு கூடிடாய்ங்கயா ஒன்னு கூடிடாய்ங்கயா.. ஆள் இல்லாது டெஸ்டர் குருப்க்கு டீம் லீடர் ஆய்டலாம்னு நினைச்சேனே.. இப்படி அந்த ஆசைல மன்ன அள்ளி போட்டிங்களே.. "

புதியதாய் வந்த சக்தியுடன் மேனேஜர் உள்ளே சென்று கதவை சாத்தி பேச ஆரம்பிக்க ..

"பாத்தியாடா மனகேற்கு கொழுப்ப.. இவளோ நாள் உளைச்சவன வெளிய தள்ளி கதவ பூட்டு உள்ள போய்டாய்ங்க.."

"தல நீ ஊம்னு ஒரு வார்த்தை சொல்லு.. மனேஜர போஸ்ட விட்டே தூக்கிடலாம்.."

"அங்க என்ன கிளயன்ட் அசிங்க அசிங்கமா திட்டிட்டு இருந்தான். அபோ எல்லாம் சும்மா இருந்துட்டு இன்னும் ஒரு மாசத்துல ரேடிறேது ஆகா போற மனேஜர துக்குரேன்னா சொல்றே.. ராஸ்கல்.."

1 comment:

Ammuseo said...

nice post. haaaaaaaa heeeeeeeeeeeee
:-B